Posts

இராசேந்திர சோழரின் பிறந்தநாள்

Image
தமிழ்ப்பேரினத்தின் தன்நிகரில்லா பேரரசர் கங்கை கொண்டான் கடாரம் வென்றான் என போற்றப்பட்ட பெரும்பாட்டன் இராசேந்திர சோழர் பிறந்த நாள் ❣️ ஆடி திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்து ஆசிய கண்டத்தின் பெரும்பகுதியை தனது ஆளுகையின் கீழ் கொண்டுவந்து நல்லாட்சி புரிந்த கோமகன்! கோப்பரகேசரி என்ற பட்டத்தோடு அரியணையேறிய சோழர்குலத் திலகம். வங்கக்கடல், கலிங்கம், சுமத்ரா, சீனம் போன்ற இடங்களில் எல்லாம் தம் ரதகஜதுரக பதாதிகளுடன் ஒரு வேங்கையைப் போன்று அலைகடலில் சீறிப் பயணித்து வெற்றிக்கொடி நாட்டியவன். மாமன்னர் இராசராச சோழருக்குப் பிறகு மிகப் பெரியளவில் படைத்திரட்டி, கங்கை வரை சென்று வெற்றிக்கொடி நாட்டி வந்த பேரரசர் இராசேந்திர சோழர் மட்டுமே. சீறும் அலைகடல் மீது பல கலம் செலுத்தியவன் என்று அவன் மெய்கீர்த்தி பறைசாற்றுகிறது. இராசேந்திர சோழர் தன் மத்திம வயதில் திருவாரூரைச் சேர்ந்த பரவை நாச்சியார் என்கிற தேவரடியாரை விரும்பினான். பேரரசரின் பிறந்தநாளான திருவாதிரை நாட்களில் சிதம்பரம் நடராசப் பெருமான் கோவிலுக்கு வருகிற சிவனடியார்கள் மற்றும்  சிவாச்சாரியார்களுக்கு அமுது படைப்பதற்காக 72 வேலி நிலத்தை தானமாகக் கொடுத்த

மாணிக்கவாசகர் குருபூசை (ஆனி மகம் - 2023)

Image
சிதம்பரத்தில் சிவபெருமான் அந்தணராக வந்து அதாவது தமிழ் அந்தணராக (ஆமாத்தியர்) மாணிக்கவாசகருக்கு அருள் புரிதல் ஆனி மகம் குருபூஜை தினப் பகிர்வு! மாணிக்கவாசகர் அந்தணர் தான் (ஆமாத்தியர்) பிரிவு நாவிதர் குலம். அரிமர்த்தன பாண்டியனுக்கு அமைச்சராக இருந்த திருவாதவூரர் எனப்படும் மாணிக்கவாசகர் ஆமாத்திய குல அந்தணர் எனக்குறிப்பிடப்படுகிறார். இவர் காலம் கி.பி.9-ஆம் நூற்றாண்டு. ‘வைத்தியர் ஆயுள்வேதியர் மருத்துவர் ஆரியர் கடகர் ஆமாத்தியரே’ என்று வைத்தியரைக் குறிப்பிடும் சொற்களை வரிசைப் படுத்தும் அபிதான மணிமாலை என்ற நிகண்டு (செய்யுள் -235). "ஆயவளம் பதியதனின் ஆமாத்தியரில் அருமறையின் தூய சிவாகம நெறியின் துறை விளங்க…" வந்தவர் மணிவாசகர் என்று கூறும் திருவிளையாடற் புராணம் (வாதவூரருக்கு உபதேசித்த படலம்-செய்யுள்4). '‘மன்னுமிந் நகரிதன்னுள் மானமங்கலத்தார் ஆகுந் தொன்னெறி முனிவராம் ஆமாத்தியர் தொழுகுலத்து நன்னெறி விடையிற் போந்தார் நண்கணத் தலைவர் நாமம் மின்னெறி வாதவூரர் என்றுவந் துதயஞ் செய்தார்’ என்று கூறும் திருவாலவாயுடையார் திருவிளையாடற் புராணம் (ஞானோபதேசம்-செ.6.) நரியைப் பரியாக்கி திருவாதவூ

பாலீவரர் கோவில் நாவிதர் குலம்

Image
#சோழர்_பயணம்   ஆந்திர எல்லைப்பகுதியில் 110 வருடங்களுக்கு முன்பு #நாவிதர் சமுதாயத்தவர்களால் பாலீவரர் கோவில் வளாகத்திற்குள்  மருத்துவம் பார்ப்பதர்க்காவே கட்டப்பட்டிருந்த எட்டு கால் கல் மண்டபம் ஒன்றை காணமுடிந்தது.   அச்சுற்று வட்டாரப்பகுதி மக்களுக்கு இந்த மண்டபத்தில் வைத்துதான் மருத்துவம் பார்க்கப்பட்டுள்ளது. இதில் கவனிக்கதக்க விசயம் என்னவென்றால் இக்கோவில் #பையூர்_கோட்ட_வெள்ளாள_முதலியர்களின் கட்டுப்பாட்டீல் இருக்கும் ஒரு கோவில்  அந்த கோவீலில்தான் #நாவீதர் சமுதாயத்தினால் கல்மண்டபம் கட்டப்பட்டு அப்பகுதியினருக்கு வைத்தியமும் பார்க்கப்பட்டிருக்கிறது. ஆயிரம் வருடங்களுக்கு முன்பே இச்சமூகத்தினர் அறுவை சிகிச்சையில் வல்லவர்களாக இருந்தார்கள் என்பதை கொங்கு மண்டல சதகம் வாயிலாக அறிய முடிகிறது. சேர அரசி ஒருத்திக்கு அறுவை சிகிச்சை மேற்கொண்டு அவள் உயிரை காப்பாற்றியதற்காக வெள்ளகோவில் அருகே மங்கலைபட்டி என்ற ஒரு ஊரையே அம்மருத்துவருக்கு தானமாக வழங்கப்படிருந்த செய்தியை கொங்கு மண்டல சதகம் கூறுகிறது.  அப்படிப்பட்ட ஒரு சமூகத்தை இன்று நாம் சுத்தமாக மறந்துவிட்டோம். காரணம் நவீன மருத்துவம் வள

ஆமாத்தியர் (மாணிக்கவாசகர்)

Image
அரிமர்த்தன பாண்டியனுக்கு அமைச்சராக இருந்த திருவாதவூரர் எனப்படும் மாணிக்கவாசகர் ஆமாத்திய குல அந்தணர் எனக்குறிப்பிடப்படுகிறார். இவர் காலம் கி.பி.9-ஆம் நூற்றாண்டு. ‘வைத்தியர் ஆயுள்வேதியர் மருத்துவர் ஆரியர் கடகர் ஆமாத்தியரே’ என்று வைத்தியரைக் குறிப்பிடும் சொற்களை வரிசைப் படுத்தும் அபிதான மணிமாலை என்ற நிகண்டு (செய்யுள் -235). "ஆயவளம் பதியதனின் ஆமாத்தியரில் அருமறையின் தூய சிவாகம நெறியின் துறை விளங்க…" வந்தவர் மணிவாசகர் என்று கூறும் திருவிளையாடற் புராணம் (வாதவூரருக்கு உபதேசித்த படலம்-செய்யுள்4). '‘மன்னுமிந் நகரிதன்னுள் மானமங்கலத்தார் ஆகுந் தொன்னெறி முனிவராம் ஆமாத்தியர் தொழுகுலத்து நன்னெறி விடையிற் போந்தார் நண்கணத் தலைவர் நாமம் மின்னெறி வாதவூரர் என்றுவந் துதயஞ் செய்தார்’ என்று கூறும் திருவாலவாயுடையார் திருவிளையாடற் புராணம் (ஞானோபதேசம்-செ.6.) இதே குலத்தைச் சேர்ந்தவரெனக் குறிப்பிடப்படும் புகழ்பெற்ற மற்றொருவர் பெரியபுராணம் சுட்டும் சிறுத்தொண்டர் எனப்படும் பரஞ்சோதியார். பல்லவப் பேரரசன் முதலாம் நரசிம்மவர்மனுக்காகப் படைநடத்தி வாதாபி வென்றவர். இவர் காலம் கி.பி.7-ஆம் நூற்றாண்

ஆதி தமிழ் அந்தணர்கள் (மகாமாத்திரர் - ஆமாத்தியர் பிரிவு)

Image
ஆதி தமிழ் அந்தணர்கள் புராண இதிகாச காலங்களை எடுத்துக்கொண்டால் போர்த்தொழில் புரியும் க்ஷத்திரியரான கௌசிகர் வேதங்களைப் படித்து இராஜரிஷியாகவும் பின்னர் பிரம்மரிஷி விஸ்வாமித்திரராகவும் ஆகிவிட்டார். வேடனான வால்மீகி ரிஷியாகப் போற்றப்படுகிறார். அதேபோல் பிராமணரான பரசுராமர், போர்வேடம் பூண்டு க்ஷத்திரியர்களுடன் போர் புரிந்ததைப் பார்க்கிறோம். இப்படிப் பல உதாரணங்கள். இந்த வகையில் பிராமணராகப் பிறந்தாலும் போர்த்தொழில் புரிந்தவர்களை க்ஷத்திரியப் பிராமணர்கள் என்று குறிக்கும் வழக்கம் வந்தது.  மகாபாரதத்தில் வரும் துரோணரும், கிருபரும், துரோணரின் மகனான அஸ்வத்தாமனும் குருக்ஷேத்திரப் போரில் பெரும் பங்கு வகித்தார்கள். பரசுராமர் பீஷ்மருக்கும் கர்ணனுக்கும் போர்க்கலையைக் கற்றுத்தருகிறார். இப்படிப் பல உதாரணங்கள் உண்டு.  சரித்திர காலத்திற்கு வந்தால், மௌரியர்களுக்கு அடுத்து வடநாட்டில் ஆட்சி புரிந்த புஷ்யமித்திர சுங்கன் ஒரு க்ஷத்திரியப் பிராமணரே. பாரத்வாஜ கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள் என்று கூறிக்கொள்ளும் அவர் தோற்றுவித்த சுங்க வம்சம் (பொயுமு 1ம் நூற்றாண்டு) பாரதத்தை சிறிது காலம் ஆண்டது.   அதே போலத் தென்ன

தமிழகத்தில் பிராமணர்கள்

Image
          தமிழகத்தில் பிராமணர்கள் முடியரசுக் காலகட்டத்தில் அரசியல் அதிகாரத்துக்கும் மத நிறுவனங்களுக்கும் உள்ள ஒட்டுறவு பிரிக்க முடியாதது. ஐரோப்பிய அரசுகளின் மீதான வாட்டிகன் போப்பாண்டவரின் செல்வாக்கும், இஸ்லாமிய அரசுகளின் மீதான கலீஃபா/உலமாக்களின் செல்வாக்கும் உலக வரலாறு அறிந்ததே. இதையொப்பத் தென்னிந்திய அரசர்களின் மீது ஸ்மார்த்த அத்வைத (சங்கர) மடங்களின் செல்வாக்கு கால்கொண்டது. விஜயநகரப் பேரரசும் சங்கர மடமும் பதினான்காம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வடஇந்தியப்பகுதிகள் மட்டுமின்றி, ஹொய்சள ராச்சியத்தைத் தவிர பெரும்பாலான தென்னிந்திப் பகுதிகளும் டெல்லி சுல்தான்களின் கீழ் வந்தன. ஹொய்சள மன்னன் மூன்றாம் வல்லாளனின் உறவினராகவும், அவரது நாட்டின் வடபகுதிகளை ஆண்டுவந்தவராகவும் இருந்த ஹரிஹரனும், அவர் சகோதரன் புக்கனும் வடபுலப் படையெடுப்புகளைத் தடுக்கும் நோக்கோடு துங்கபத்திரை நதிக்கரையில் வித்தியாரண்யரைச் சந்தித்தனர். அவர் ஆலோசனையின் பேரில் ஒத்துழைப்போடு கி.பி.1336-இல் விஜயநகரத்தை நிர்மாணித்தனர். கி.பி.1343-ல் மதுரை சுல்தான் கியாசுதீன் தம்கானியுடன் நடந்த போரில், மூன்றாம் வல்லாளன் வஞ்சகமாகவும் க

#வரலாற்றில் போர்வாட்கள்

Image
#வரலாற்றில்போர்வாட்கள் தொல் தமிழர் வாணிகத்தில் சிறந்து விளங்கினார் என்று வரலாறு கூறுகிறது .அவர்கள் வெளிநாடுகளுக்கு வணிகத்துக்கு அனுப்பிய பொருள்கள் எனும்போது மிளகு கிராம்பு போன்ற உணவு மணமூட்டிகள் ,சந்தானம் அகில் ,மயில்தோகை யானைத்தந்தம் என்று தந்திரமாக வேளாண்மை பொருள்களையே அனுப்பியதாக வரலாற்றுக்குறிப்புகளில் சொல்லுவது வழக்கம் . ஆனால் தொல் தமிழர்கள் பல பொருள்களின் உற்பத்தித்துறையில் தலை சிறந்து விளங்கினார் ,உற்பத்திதுறையில் உலகின் தலை சிறந்து  இருந்ததால் தான் பல நாட்டினரும் இங்கேத்தேடி வந்தனர்  உற்பத்தியில் சிறந்து விளங்கியவரைதான் இந்தியா செல்வம் மிக்க நாடாக இருந்தது  இன்றுவரை பல நாட்டினருக்கு புதிராக இருக்கும் பல தொழில் நுட்பங்கள் தமிழரிடம் பண்டைக்காலத்தில் இருந்து வந்திருக்கிறது . இப்போதுஇது  எதிர்மறையாக உள்ளது ? இத்தகைய சீர்கேடு எப்படி நிகழ்ந்தது என்பதன் பதில் வரலாற்றை ஆழமாகத்தேடினால் தான் கிடைக்கும் . நாம் இழந்ததில்  முக்கியமானது இரும்பு உருக்கு தொழில் நுட்பம் . அப்போதைய இந்தியாவின் ( அப்போது இந்தியா 56 நாடுகளாக இருந்தது எங்கும் தமிழர்கள் பரவி வாழ்ந்தனர் இரும்பு தாது கிடைக்கும் இடமெல்